பிராம்ப்டனில் நேற்றிரவு இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Steeles Avenueவுக்கு வடக்கே, நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விபத்துக்குள்ளாகிய வாகனம் ஒன்றில் இருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்தார் எனவும், பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.