முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அதன்படி, நாளை பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்குமா என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.