இந்தியாவில், ஒக்ரோபர் மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் தற்போது பரவலான பயன்பாட்டில் உள்ளன.
இந்தநிலையில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் கிடைத்து விடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஸ்புட்னிக் வி , ஜோன்சன் அன் ஜோன்சன், நோவாக்ஸ், சைடஸ் காடில்லா (Zydus Cadila), இன்ட்ராநாசல் (Intranasal) ஆகிய தடுப்பூசிகளோ, இந்த ஆண்டில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இவற்றை அவசர காலத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பதற்கு முன்னர், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.