கும்ப மேளாவை முன்னிட்டு, உத்தரகண்டில் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர்.
உத்தரகண்டில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளாவில், இலட்சக்கணக்கானோர், புனித கங்கை நதியில் நீராடுவது வழக்கம்.
கும்ப மேளாவான இன்று கங்கை நதியில், பல்வேறு பகுதிகளிலும், இலட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
17.31 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்ப மேளாவை முன்னிட்டு கங்கையில் புனித நீராடியுள்ளனர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது,
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், யாரும் முக கவசம், சமூக இடைவெளி உட்பட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.