எரித்ரியாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36 பேரை, அந்த நாட்டின் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 14 பேர், கடந்த நான்கு ஆண்டுகளாக டஹிலிக் (Dahilik) தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஏனைய 22 பேரும், கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஈவாஞ்சலிக்கல் மற்றும் பெந்தெகொஸ்தே சமயங்களைப் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எரித்ரியாவில், 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம், ஓர்தோடாக்ஸ் (Orthodox) , கத்தோலிக்க மற்றும் லூத்தரன்( Lutheran) கிறிஸ்தவ மதப் பிரிவுகளைத் தவிர, ஏனைய அனைத்து தேவாலயங்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.