ஏயர் கனடாவுக்காக சமஷ்டி அரசாங்கம் விசேட திட்டமொன்றை அறிவிக்கவுள்ளதாக சி தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
முற்பதிவு செய்த பயணிகளுக்கான பணத்தினை மீள வழங்குவதில் ஏற்பட்டு வந்த இழுபறிகளை அடுத்து அவற்றை விரைவாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏயர் கனடாவுக்கு ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை மற்றும் மீண்டெழுவதற்காக விசேட நிதி உதவி அளிக்கும் ஏற்பாடொன்றை சமஷ்டி அரசாங்கம் இன்று அறிவிக்கவுள்ளதாக சி தொலைக்காட்சி குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், கொரோனா சூழலில் ஏயர் கனடாவின் வருமானம் வெகுவாக சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.