ஒன்ராறியோவில் நோர்த் யோர்க் பகுதியில் குறுகிய நேர இடைவெளிக்குள் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 11 மணியளவில், ஷெப்பேர்ட் அவென்யூ (Sheppard Ave) பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பலமுறை சுடப்பட்டிருந்த குறித்த ஆண், மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, அல்பியன் வீதிக்கு வடக்கே ( Albion Rd.) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதற்கு முன்னதாக, கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது என்றும், இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.