ஒன்ராரியோவில் மறு அறிவித்தல் வரையில் பாடசாலைக் கல்வி மெய்நிகர் முறையிலேயே தொடரும் என்று முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.
ஒன்ராரியோ மாகாண அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, கொரோனா தொற்றுப்பரவில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையால் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத விடுமுறையைத் தொடர்ந்து மெய்நிகர் வழியிலேயே பாடசாலைக் கல்வி தொடரப்படவுள்ளது.
சமுதாயத் தொற்றுப்பரவலைத் தடுக்கும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று போர்ட் மேலும் குறிப்பிட்டார்.