ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முதல் முறையாக போட்டியிட்டிருந்த மாதவராவ்வுக்கு வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் உடல்நலன் பாதிக்கப்பட்டது.
மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,
“ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் மரணத்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்படமாட்டாது.
அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி மே 2ஆம் திகதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
மாதவராவ் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.