சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து சிறிலங்காவேதீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது.
மேலும் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் ஊடகப்பேச்சாளரும் அரசியல் பிரிவுத் தலைலவருமான லு சொங், “சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே சீன அரசாங்கம் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை அரசாங்கத்திடம் கையளித்தது.
இந்த தடுப்பூசியை யாருக்கு எங்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அது அந்நாட்டின் உள்ளக விவகாரமாகும். அதில் சீனா ஒருபோதும் தலையிடப்போவதில்லை” என தெரிவித்தார்.