அமெரிக்காவில், சிறிலங்காவின் நற்பெயரை, அதிகரிப்பதற்கு, சிஐஏ எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் முகவருக்கு 1.31 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற அமெரிக்க இதழ், இந்த புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இமாட் சுபேரி என்ற சிஐஏ முகவருக்கு, இந்தப் பணம், 2014ஆம் ஆண்டு சிறிலங்கா மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்காக கிட்டத்தட்ட 6.5 மில்லியன் டொலரை, வழங்க மத்திய வங்கி இணங்கியது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சிறிலங்காவின் பெயரை ஊக்குவிப்பதற்காக இந்தளவு நிதி செலவிடப்படுவதற்கு, அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ அனுமதி பெறப்படவில்லை என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, வரி மோசடி, வெளிநாட்டு செல்வாக்கு செலுத்துதல் மற்றும் பிரசார நிதி விதிமீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ள சிஐஏ முகவரான இமாட் சுபேரிக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.