ஒன்ராரியோ அரசாங்கம் தனது கொரோனோ தடுப்பூசி விநியோக திட்டத்தினை 700இடங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை 55வயதிற்கு மேற்பட்டவர்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் மாகாணம் முழுவது ஆயிரத்து 400 மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையானது ஏப்ரல் நிறைவில் ஆயிரத்து 500ஆக உயரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.