தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் நேற்று ஆரம்பமாகியது. தினமும் 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விழா 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
பணியாளர்களுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தடுப்பூசிக்க எந்த தட்டுப்பாடும் இல்லை. 17 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளனஎன்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.