ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள வர்துஜ் (Warduj) நகரின், நிழல் ஆளுநராக இருந்த தலீபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த காரி ஹைதர் (Qari Haidar) வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வர்துஜ் நகரில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் வான்படை தாக்குதலை நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலில், தலீபான்களின் நிழல் ஆளுநர் காரி ஹைதர் மற்றும் அவருடன் இருந்த 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 23 பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வான் தாக்குதலில் தலீபான்களின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் ஆகியனவும் அழிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மத்திய பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு வான் தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.