பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மருத்துவமனை ஒன்றின் முன்பாக, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாரிசில் ஹென்றி – டொனால்ட் என்ற மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்ற நிலையில், முன் வாசலில் இன்று மதியம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் சென்ற மர்மநபர் மருத்துவமனைக்கு முன்பாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலை தடுக்க முயன்ற மருத்துவமனை பெண் காவலாளி மீதும் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினாலர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பெண் காவலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.