யாழ்ப்பாணம் – தென்மராட்சி, அல்லாரை பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்களால், வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் 72 வயதுடைய சிவராசா என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயோதிபத் தம்பதி வசித்து வந்த வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல், அவர்கள் இருவரையும் கட்டி வைத்து துன்புறுத்தி, பணம், நகை என்பனவற்றை கொடுக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
கொள்ளையர்களால் கழுத்து நெரிக்கப்பட்ட போது, வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
அதையடுத்து வீட்டிலிருந்த ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளுடன், கொள்ளைக் கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.