தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்பார்த்தார்கள் ஜனாதிபதி ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுப்பார் என்று. ஆனால் அவர் அவ்வாறு நடந்துகொள்ளாததனால் அரசாங்கம் மீது மக்கள் குறை கூறுகின்றார்கள்.
பௌத்த தேரர்களும் ஜனாதிபதி, ஹிட்லர் போன்று செயற்பட வேண்டும் என கோருகிறார்கள்.
ஆனால் ஜனாதிபதிக்கு ஒரே தடவையில் ஹிட்லர் ஆக மாறவேண்டி இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனினும் சில பிரிவினரின் செயற்பாடுகளை அடுத்து அவர் ஹிட்லராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு ஜனாதிபதி ஹிட்லர் ஆனதன் பின்பு அரசு மீது பழி சுமத்தப்படுவதும் நின்றுவிடும். அத்தோடு அனைத்து செயற்பாடுகளும் சரியாக முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.