சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அல்குவெய்டா, அபுசயாப் போன்ற இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் அண்மைக்காலமாக சிறிலங்காவை தளமாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
அரபு நாடுகள் கிழக்கு, தெற்கு ஆபிரிக்க நாடுகளில் செயற்படும் இந்த பயங்கரவாதிகள் சிறிலங்காவில் நடமாடுவது அதிகரித்துள்ளது.
அத்துடன், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலும் சிறிலங்காவை போதைப் பொருட்கள் கடத்தும் மையமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.
இதை முறியடிக்க சிறிலங்காவிடம், போதிய படை பலம், புலனாய்வு அமைப்புகள் இல்லாத நிலையில், இந்தியா போன்ற நாடுகளின் உதவியை கோருவதற்காகவே கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.