இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மியன்மாரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்வடைந்துள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இராணுவ ஆட்சிக்கு எதிராக, இராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி மியன்மாரில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மியான்மாரில் போராட்டங்களை அடக்க இராணுவம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான பொது மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.