கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும், ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், மருந்தின் தேவையை கருத்தில் கொண்டே, ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து முக்கிய பங்காற்றி வருகிறது.
உள்நாட்டில் தேவை அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.