வவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு- குருந்தூர் மலைக்கு அருகிலுள்ள 400 ஏக்கர் காணிகளை தொல்பொருள் செயற்பாடுகளுக்கு பெற்றுக்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக விதுர விக்ரமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குருந்தூர் மலைக்கு அருகிலுள்ள 400 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறும் இது பொருத்தமற்ற செயற்பாடாகுமெனவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.