மேற்கு வங்கத்தில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டது இனப்படுகொலை என்று மாநில முதல்வர் மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின், கூச்பெஹாரில் , நேற்று நடந்த 4ம் கட்ட தேர்தல் வன்முறையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சுட்டதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மம்தா பனர்ஜி,
“இது ஒரு இனப்படுகொலை. காலிலோ அல்லது உடம்பின் கீழ் பகுதியிலோ சுட்டிருக்கலாம். ஆனால், கழுத்து அல்லது நெஞ்சு பகுதிகளில் ரவைகள் தாக்கியுள்ளன.
திறமையற்ற பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ள திறமையற்ற மத்திய அரசு, மேற்கு வங்கத்தை பிடிக்க தினமும் வருகின்றனர்.
உங்களை வரவேற்கிறோம். உங்களை தடுக்கவில்லை. ஆனால், நீங்கள் மக்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.