பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கிய அரசாங்கத்தில் இலஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது என்றும், அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகவும், சிறிலங்கா சுதந்திர கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ராஜோபவனராமய விகாராதிபதியை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ இவ்வாறு கூறியுள்ளார்.
“நாட்டுக்கு இன்று முன்னுதாரணமான தலைவர் தேவை. எங்கு பார்த்தாலும் ஊழல் மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வருகிறது.
தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, பீசிஆர் மோசடி என வரிசை நீண்டு செல்கிறது.
இதனால் மக்களின் நம்பிக்கை சரிந்து கொண்டு செல்கிறது.
ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படவில்லை. எவரையும் தாக்கவில்லை, கொல்லவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.