கொரோனா தாக்கத்தின் அழிவில் இருந்து மீள்வதில், உலகம் வெகு தொலைவில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.
“உலக மக்களின் முழு ஆதரவுடன் கொரோனாவின் தாக்கத்தை நாம் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு தற்போது உலகில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் வேகம் குறைவாகவே உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.
இறப்பு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளமை, மனிதகுலத்துக்கு சாதகமான விடயம்.
ஒரு கட்டத்தில் இந்த வைரஸ் தாக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையை இது தருகிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.