இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது.
இதற்கமைய, இதுவரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 136 இலட்சத்து 89 ஆயிரத்து 453 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் 879 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், 12 இலட்சத்து 64 ஆயிரத்து 698 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்