சித்திரைப் புத்தாண்டு கனடிய நேரப்படி இன்று மாலை 4.05 இற்கு மலர்கின்றது.
சார்வரி வருடம் நிறைவடைந்து பிலவ வருடம் இன்று பிறக்கின்றது.
நண்பல் 12.05இலிருந்து இரவு 8.05வரையில் புண்ணிய காலமாக இருக்கின்ற நிலையில் இக்காலத்தில் மருத்துநீர் வைத்து நீராரி ஆராதனைகளில் ஈடுபட முடியும்.
அத்துடன், இக்காலப்பகுதியில் கனடாவில் உள்ள ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. கனடிய தமிழ் வானொலியும் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் தனது இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது