சீனாவின் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக, சீனாவின் நோய் கட்டுப்பாட்டு உயர் அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் தலைவர் கா பூ (Gao Fu) “உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக பெரியளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை.
தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க தடுப்பூசிகளை கலப்பது தொடர்பில் சீனா ஆலோசனை நடத்தி வருகிறது.
தடுப்பூசி செயல்முறையை மேம்படுத்த மருந்து வழங்கும் முறைகள் மற்றும் இடைவெளி நாட்களை மாற்றியமைப்பதற்குநடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி சீன ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அந்த அதிகாரி தனது கருத்துக்களிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
தடுப்பூசிகளுக்கு குறைந்த பாதுகாப்பு வீதம் இருப்பதாக தான் முன்னர் ஒப்புக்கொண்டது தவறான புரிதல்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.