யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, பழைய காவல் நிலையத்திற்கு அண்மையில், வீதியை கடந்த இளைஞன் ஒருவர் சொகுசு பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கிளிநொச்சி – அக்கராயன்குளத்தை சேர்ந்த 31 வயதுடைய, கெவின் கிஷோகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் உள்ள மதுபானசாலைக்குச் சென்று விட்டு வீதியைக் கடந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து இளைஞன் மீது மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





