தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்படி செயற்பட்டு வருவதாக, மம்தா பானர்ஜி, குற்றம்சாட்டியிருந்தார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, முதல்வர் மம்தாவுக்கு, 24 மணி நேரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து, தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, இன்று இரவு, 8:00 மணி வரை, அவரால் பிரசாரம் செய்ய முடியாது.
தனக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா, கோல்கட்டாவில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து மம்தா போராட்டம் நடத்தினார்.
அதேவேளை, கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரை சுட்டு கொன்றிருக்க வேண்டும் என பேசிய பா.ஜ.க நிர்வாகி ராகுல் சின்ஹாவிற்கு 2 நாள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.