பிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நகரபிதாக்களுடன் நடத்திய பேச்சுவாரத்தைகளின் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த முடிவை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற விவாதத்தில் வைத்து, அதற்காக வாதாடும் கடமை, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு உள்ளது.
பிராந்தியங்கள் மற்றும் மாவட்டங்களிற்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 13 மற்றும் 20ஆம் திகதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று அதிகரித்தாலும், தேர்தலிற்காக உள்ளிருப்பு தளர்த்தும் முடிவை ஜனாதிபதி அறிவிக்கும் ஆபத்தும் உள்ளது.
முதற் தொற்றலையின் போதும் மாநகரசபைத் தேர்தலிற்காகவே அவசரப்பட்டு மக்ரோன் உள்ளிருப்பை முடித்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.