தமிழ்நாட்டில் – வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
540 வாக்குகள் கொண்ட வேளச்சேரி டி.ஏ.வி பாடசாலையில் உள்ள 92ஆம் இலக்க வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இங்கு மறுதேர்தல் வரும் 17ஆம் நாள் காலை 7 முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் என்று தேர்தல் ஆணைய செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் ஆறாம் நாள் நடைபெற்ற போது, வேளச்சேரி – தரமணி சாலையில் மூன்று பேர் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உந்துருளியில் கொண்டு சென்ற நிலையிலேயே இந்த மறுதேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.