பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் 3ஆவது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
ரஷ்யாவின் கமலேயா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 59 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இந்தியாவில் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த வைத்தியர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனத்துடன் கடந்த செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
3ஆம் கட்ட ‘ஸ்புட்னிக் வி’ பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதன் அடிப்படையில் அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.