ஒக்ஸ்போர்ட் நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று கனடிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மிகவும் சொற்ப அளவிலேயே பக்கவிளைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கனடிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இத்தடுப்பூசியின் முதலாவது மருந்தளவைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாறுபட்ட உடல் வெளிப்பாடுகள் இருப்பின் அவர்கள் இரண்டாவது மருந்தளவைப் பெறக்கூடாது என்று தடுப்பூசி ஒழுங்கு படுத்தும் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.