ஆப்கானிஸ்தானில் இருந்து செப்ரெம்பர் 11-ம் நாளுக்குள் அமெரிக்கப் படையினர் முற்றிலுமாக மீளப் பெறப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,
“ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை மீளப் பெறுவதற்கான நடைமுறைகளை அமெரிக்கா மே 1-ம் நாள் ஆரம்பிக்கும்.
படை பலத்தை குறைக்கும்போது தாக்குதல் நடத்தினால் எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி, எங்களையும், எங்கள் கூட்டாளிகளையும் பாதுகாப்போம் என்பதை தலீபான்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
செப்ரெம்பர் 11 இற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் மீளப் பெறப்படும் என்ற போதும், பயங்கரவாத அச்சுறுத்தல்களில் நாங்கள் கவனமாக இருப்போம்.’ என்றும் அறிவித்துள்ளார்.
அதேவேளை, ஆப்கானிஸ்தானில் உள்ள 2,500 அமெரிக்கப் படையினருடன், நேட்டோ படைகளும் வெளியேறவுள்ளன.
இது தொடர்பாக நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையில் பெல்ஜியத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள், ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் மே 1ஆம் நாள் முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 7 ஆயிரம் நேட்டோ படைகளை திரும்பப்பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது,