போலி கடவுச் சீட்டொன்றை பயன்படுத்தி துபாயூடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதேசத்தில் வசிக்கும் இவர் 24 வயதுடையவரென எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக இவர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அதன் பின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட தொழினுட்ப ரீதியான பரிசோதனையின் போது கனடாவுக்கான கடவுச் சீட்டு போலியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.