சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்ட கருத்து, சிறிலங்கா அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அடோல்ப் ஹிட்லர் பற்றிய இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் கருத்து, அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
இந்த கருத்து அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல, இதனை அரசாங்கத்தின் முன்னோக்கு என்று கருதக் கூடாது.
இந்தக் கருத்து, சிறிலங்காவில் உள்ள ஜேர்மனி தூதுவருடன் உராய்வை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.” என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.