கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்து ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 49ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை ஒன்பதாயிரத்து 54பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 17பேர் பாதிக்கப்பட்டதோடு 93 பேர் உயிரிழந்துள்ளனர்.