ஹிட்லராக மாறவே சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாக எவராவது கூறினால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று, முருந்தொட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஹிட்லர் போன்று மாறுவாரென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
அமைச்சர்கள் பிரபலமடைவதற்காக இவ்வாறு கூறுகின்றார்களா என்று தெரியவில்லை. உண்மையில் இதனை நாம் கண்டிக்கிறோம்.
69 இலட்சம் வாக்குகளும் இதற்காகவே கிடைத்தது என எவரும் பொய் சொல்ல முடியாது.
இந்த வாக்குகள் என்னாலேயே கிடைத்தது என்று சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாயை திறந்து கூறலாம், அவர் மீதான நம்பிக்கையினால் தான் 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன.
மேலதிகமாக 5 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அந்த 5 இலட்சம் வாக்குகளும் தற்போது இழக்கப்பட்டுள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.