திருமணம் செய்து கொள்வதாக பிரித்தானிய இளவரசர் ஹாரி தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டிகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை பஞ்சாப் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
‘பிரித்தானிய இளவரசர் ஹாரி, தனது மனுதாரர் யாச்சி என்பவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு, ஏமாற்றிவிட்டார். அவருக்கு எதிராக பிரித்தானிய காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, சண்டிகரை சேர்ந்த சட்டத்தரணி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொள்வது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு கற்பனையே என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி “வழக்கில் ஆதாரமாக காட்டும் அச்சுப்பிரதிகள் உண்மையானவை அல்ல; முகநூல், ருவிட்டர் போன்ற இணைய ஊடக தளங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு இதுபோன்று மோசடிகள் இடம்பெறுகின்றன.
மனுவில் எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை.
போலி உரையாடல்களை உண்மை என்று கருதி ஏமாற்றமடைந்த மனுதாரருக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.
கனவு உலகில் வாழும் மனுதாரர், அதில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.