செவ்வாய் கிரகத்தில் உலங்குவானூர்தியைப் பறக்க விடும் நிகழ்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்ஜினிட்டி (Ingenuity) என்ற சிறிய ரக உலங்குவானூர்தியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது.
ஒரு கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த உலங்குவானூர்தி, ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெர்சிவரன்ஸ் (Perseverance) விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த உலங்குவானூர்தியை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலங்குவானூர்தி பறக்கும் நிகழ்வு எப்போது நடைபெறும் என்பது அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.