பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி முயற்சிகள் இடம்பெறுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
“வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் கணினி நிபுணர்கள் வந்து செல்ல திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் நடத்த 3 கணினி நிபுணர்கள் அந்த வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது.
கணினி நிபுணர்களை அனுமதித்தது பற்றி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரியிடம் முறைப்பாடு அளித்துள்ளேன்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் முறைப்பாடு செய்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.