புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும், மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துக்கள். இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்