மன்னார் பள்ளிமுனையில் இருந்து மீன் பிடிக்கச் மீனவர்கள் மீது இரணைதீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள சிறிலங்கா கடற்படையினரின் சோதனைச் சாவடியில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர், படகு ஒன்றில் 4 மீனவர்கள் நேற்று மாலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
நள்ளிரவு 12 மணியளவில் இரணைதீவு கடற்பரப்பில் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையினர் குறித்த படகை நிறுத்தி சோதனையிட்டு 4 மீனவர்களையும் சுமார் 3 மணி நேரம் கடலில் தடுத்து வைத்ததாகவும், தடியினால் மீனவர்களை தாக்கியதுடன், மீனவர்களின் தொலைபேசி மற்றும் மின்விளக்கு போன்றவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.