தென்மராட்சி – மட்டுவில் துா்க்கைம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இன்று காலை எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சகோதாரியான ஒன்றரை வயதுக் குழந்தை, சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் கஜேந்திரன் சுவேசனா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் இன்று காலை இடம்பெற்ற மற்றொரு விபத்தில் சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
வாகனம் ஒன்று மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.