கொரோனா தொற்றினால், சுகாதாரப் பாதுகாப்பு முறை முழுமையான சரிவைச் சந்திப்பதைத் தவிர்க்க, மேலதிக கடமைகளைச் செய்யத் தயாராக இருக்குமாறு, யோர்க் பிராந்தியத்தில் உள்ள மெக்கன்சி ஹெல்த் (Mackenzie Health) தலைமை அதிகாரி மருத்துவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
மூன்றாவது அலையைக் கையாள்வது முன்னைய அலைகளைத் தாண்டியது என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என்பதால், இதற்கு தயாராக இருக்குமாறு, மெக்கன்சி ஹெல்த் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மருத்துவர் ஸ்டீவன் ஜாக்சன் (Steven Jackson) தெரிவித்துள்ளார்.
எங்கள் தீவிர சிகிச்சை பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள் மருத்துவ விடுதிகளின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இந்த அலை இருக்கும் என்றும், இந்த சவாலை எதிர்கொண்டு, எதிர்பார்ப்புகளுக்கு அப்பாலும் பணியாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உண்மையிலேயே இது மருத்துவ அமைப்புக்கு ஒரு நெருக்கடி என்றும், இதுபோன்ற நிலையில், எந்தவொரு மருத்துவரும், இதனை எதிர்கொள்வதில் பங்கேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்