வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக அனைத்துக் கட்சிகளும் இணங்கினால் வேலன் சுவாமியை களமிறக்கலாம்” என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின்போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
வேலன் சுமாமிகளை ஒரு பொது வேட்பாளராக முதல்வர் பதவிக்கு நிறுத்த ஏனைய கட்சிகளும் ஏற்றுக் கொண்டு இணங்கினால் அது தொடர்பில் நாமும் பரிசீலிக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
அதேநேரம் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா என்ற வினாவிற்கு பதிலளிக்கும் போது, “மாவை.சேனாதிராசா எனது நண்பர்.
ஆனால் முதலமைச்சருக்கு அவர் பொருத்தம் அற்றவர், மாவை.சேனாதிராசா முதலமைச்சருக்குப் பொருத்தமற்றவர் என்பதனாலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அன்றே என்னைத் தேர்வு செய்தார்” என்றார்.