எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், எஸ் 400 மற்றும் பிற ஒப்பந்தங்களை பொறுத்தவரை ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு மற்றும் பிற கடப்பாடுகளை பூர்த்தி செய்ய இந்தியாவும், ர ஷ்யாவும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.