சிறிலங்காவில் இருந்து கடும்போக்கு அமைப்புகளின் உறுப்பினர்கள் ஊடுருவக்கூடிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்திய கரையோர மாவட்டங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கரையோர மாவட்டங்கள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை இயக்குனர் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் ஊடுருவக்கூடிய எச்சரிக்கை இருப்பதால் இந்த முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீன்பிடிப் படகுகள் மூலம் மத அடிப்படைவாதிகள் தமிழ் நாட்டுக்குள் நுழையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் ஏற்கனவே இந்திய தௌஹீத் அமைப்புகளுடன் தொடர்பைப் பேணி வருவதாகவும் மாநில காவல்துறை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.