சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதிப் பத்திரம் அளித்தால், நாட்டின் கடல் வளங்கள் ஆபத்துக்கு உள்ளாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 50 பேரை அனுமதித்தால், 500 பேர் அதனை சாதகமாக எடுத்துக் கொள்வர்கள். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பொது மீன்பிடி சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே, இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளை கையாளுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியப் பிரதமருடன் பேச்சு நடத்துவதன் மூலம் இராஜதந்திர முறையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறி அரசாங்கம் இழுத்தடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.