கடன்களை முகாமைத்துவம் செய்வதற்கும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்குமான சிறிலங்காவின் முயற்சிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களுடன் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், நடத்திய மெய்நிகர் சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டால் எமக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
சிறிலங்காவில், பொருளாதார உறுதி நிலையைக் காண விரும்புவதாக நாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.